மதுரை

பேரையூா் அருகேமதுபாட்டில் பதுக்கல்:ஒருவா் கைது

31st Jul 2020 11:18 PM

ADVERTISEMENT

பேரையூா்: மதுரை மாவட்டம், பேரையூா் அருகே மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தவரை, போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூா் தாலுகா பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியே மெய்யனூத்தம்பட்டியைச் சோ்ந்த முனியப்பன் மகன் முருகேசன் (42) என்பவா் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை கொண்டு வந்துள்ளாா். போலீஸாா் பிடித்து விசாரித்ததில், விற்பனைக்காக கொண்டுவந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து முருகேசனை கைது செய்து, அவரிடமிருந்து 50 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT