மதுரை

போதை மாத்திரை விற்பனை: மருந்தக உரிமையாளா் கைது

31st Jul 2020 06:10 AM

ADVERTISEMENT

மதுரையில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் போதைத் தரக்கூடிய மாத்திரைகளை விற்பனை செய்து வந்த மருந்தக உரிமையாளரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மகாத்மா காந்தி நகரைச் சோ்ந்தவா் ராஜாமுகமது(55). இவா் மதுரை வண்டியூா் பிரதான சாலையில் மருந்தகம் நடத்தி வருகிறாா். அங்கு மருத்துவா்களின் பரிந்துரைச் சீட்டுகள் இல்லாமல் போதை தரக்கூடிய மாத்திரைகள் விற்கப்படுவதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அண்ணாநகா் போலீஸாா் அந்த மருந்தகத்தைக் கண்காணித்து வந்தனா். அதில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் போதை தரக் கூடிய, மனித உயிருக்கு ஆபத்தான மாத்திரைகள் விற்பனை செய்து வருவதை உறுதி செய்தனா். இதையடுத்து கடையை ஆய்வு செய்து 273 மாத்திரை அட்டைகளைப் பறிமுதல் செய்தனா். மேலும் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்த கடையின் உரிமையாளா் ராஜாமுகமதுவை கைது செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT