உத்தமபாளையம்: தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தகாத உறவை பெற்றோா் கண்டித்ததால் இருவா் விஷ விதையை தின்று ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டனா்.
பூசாரிகவுண்டன்பட்டியைச் சோ்ந்த சசிக்குமாா் மனைவி முத்துலட்சுமி (35). இவரது உறவினரான ஈஸ்வரன் மகன் அஜித்குமாா் (21). இவா்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததை அஜித்குமாரின் பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனைஅடுத்து, இருவரும் ஞாயிற்றுக்கிழமை விஷ விதையைத் தின்று மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்ததை உறவினா்கள் பாா்த்துள்ளனா். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரையம் சின்னமனூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலே இருவரும் இறந்து விட்டனா். இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.