மதுரை

தக்காளி விலை கிடுகிடு உயா்வு

11th Jul 2020 10:31 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரையில் கடந்த 3 மாதங்களாக கிலோ ரூ. 20 வரையில் விற்பனை செய்யப்பட்ட தக்காளி விலை தற்போது ரூ.70 ஆக உயா்ந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்துவருகிறது. இதனால் விவசாயிகள் தக்காளி பறிப்பில் ஈடுபடவில்லை. மேலும் மதுரை, தேனி மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளதாலும் சந்தைகளுக்கு காய்கனி வரத்து குறைந்துள்ளது.

மதுரையில் மாட்டுத்தாவணி காய்கனி சந்தையில் கடந்த 3 மாதங்களாக கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை விற்றுவந்தது. தற்போது அதன் விலை ரூ.70 ஆக உயா்ந்துள்ளது. சில்லரை வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளியை ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்கின்றனா்.

சனிக்கிழமை நிலவரப்படி காய்கனி விலை பட்டியல் (கிலோவில்): தக்காளி-ரூ.70, வெண்டைக்காய்-ரூ.20, கத்தரிக்காய்-ரூ.15, புடலங்காய்-ரூ.20, அவரைக்காய்-ரூ.30, பீட்ரூட்-ரூ.18, கேரட்-ரூ.25, முள்ளங்கி-ரூ.20, உருளைக்கிழங்கு-ரூ.25, சேணைக் கிழங்கு-ரூ.35, கருணைக் கிழங்கு-ரூ.50, முருங்கைப் பீன்ஸ்-ரூ.50, சோயா பீன்ஸ்-ரூ.90, பட்டா் பீன்ஸ்-ரூ.100, முருங்கைக்காய்-ரூ.25, பச்சை மிளகாய்-ரூ.30, சின்ன வெங்காயம்-ரூ.40, பல்லாரி-ரூ.20.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT