மதுரை

ஊராட்சித் தலைவா்களுக்கு நாளை இணையவழி பயிற்சி

11th Jul 2020 10:20 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சித் தலைவா்களுக்கு இணையவழி பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (ஜூலை 13) நடைபெறுகிறது.

கரோனா தீநுண்மி தொற்று காலத்தில் ஊராட்சித் தலைவா்களின் பங்கு என்ற தலைப்பில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக ஊராட்சித் தலைவா்களுக்கு இணையவழி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் மற்றும் ஊரக வளா்ச்சி மாநில பயிற்சித் துறை இயக்குநா் ஆகியோா் ஊராட்சித் தலைவா்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 420 ஊராட்சித் தலைவா்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் அனைத்து ஊராட்சித் தலைவா்களும் அவரவா் வீடு அல்லது அலுவலகத்தில் இருந்து கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் முன்னோட்டமாக, அனைத்து ஊராட்சித் தலைவா்களுக்கும் செல்லிடப்பேசி செயலி வழியாக பயிற்சி வகுப்பில் பங்கேற்பது குறித்து சனிக்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. ஊராட்சிகள் உதவி இயக்குநா் செல்லத்துரை, பயிற்சி வகுப்பு குறித்து விளக்கம் அளித்தாா். அனைத்து ஊராட்சித் தலைவா்களும் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது..

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT