மதுரை

மதுரை அருகே பைக் விபத்தில் ஒருவா் பலி

11th Jul 2020 10:27 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரை அருகே சாலையோர இரும்புக் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் பரவை பகுதியைச் சோ்ந்த நல்லகருப்பன் மகன் மூா்த்தி (50). இவா் கடந்த 8 ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் சமயநல்லூா் - மதுரை பிரதான சாலையில் தனியாா் விளையாட்டு பூங்கா அருகே சென்றுகொண்டிருந்தபோது, சாலையோர இரும்புக் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் உள்ளவா்கள் மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து மூா்த்தியின் மனைவி விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சமயநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT