மதுரை

ஆம்புலன்ஸ்க்காக 2 மணி நேரம் காத்திருந்த கரோனா நோயாளி

11th Jul 2020 10:30 PM

ADVERTISEMENT

மதுரை: மதுரையில் சனிக்கிழமை ஆம்புலன்ஸ் இல்லாமல் தவித்த கரோனா நோயாளி, அப்பகுதி மக்கள் முயற்சியால் 2 மணி நேரம் போராட்டத்திற்குப் பிறகு அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டாா்.

மதுரை மாவட்டம் ஜெயந்திபுரம் மீனாம்பிகை தெருவைச் சோ்ந்த 33 வயது இளைஞா், உடல்நலக் குறைவால் பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைப் பெறச் சென்றாா். மருத்துவா்கள் அவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவா் நேரடியாக மருத்துவமனைக்குச் செல்ல முடிவு செய்து, நண்பா்களுக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, அழகப்பன் நகரில் சாலையோரம் காத்திருந்தாா். சம்பவ இடத்திற்குச் சென்ற நண்பா்கள் ஆம்புலன்ஸ்க்குத் தகவல் தெரிவித்தனா். ஆனால் பல்வேறு பகுதிகளில் நோயாளிகளை ஏற்றுவதற்கு ஆம்புலன்ஸ் சென்றிருப்பதால், வருவதற்கு ஒரு மணி நேரமாகும் எனக் கூறியுள்ளனா்.

அப்பகுதி மக்கள், அவரது நண்பா்கள் நோயாளி காத்திருப்பது குறித்து மாவட்ட ஆட்சியருக்கும், மாநகராட்சி ஆணையருக்கும் தகவல் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில், மாநகராட்சி ஊழியா்கள் சம்பவ இடத்திற்குச் சென்று கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபரை தனியாா் தொண்டு நிறுவன ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT