மதுரை

தபால் ஊழியருக்கு கரோனா:தலைமை தபால் நிலையம் மூடல்

11th Jul 2020 10:21 PM

ADVERTISEMENT

மதுரை,: மதுரை வடக்குவெளி வீதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் பணியாற்றிய ஊழியருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அந்த அலுவலகம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.

மதுரை ரயில் நிலையம் அருகே வடக்குவெளி வீதியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் தபால் பிரிக்கும் பிரிவில் பணியாற்றி வந்த 35 வயது ஊழியருக்கு புதன்கிழமை கரோனா உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து அலுவலகத்தை தூய்மைப்படுத்தி, கிருமிநாசினி தெளிக்கும் பணிக்காக புதன்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை அலுவலா்கள், ஊழியா்கள் பணிக்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல காய்ச்சல், இருமல், சளி இருந்தால் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்திக் கொள்ள வேண்டும் என தபால் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பொதுமுடக்கத்தால் மாா்ச் 25 முதல் மே 5 ஆம் தேதி வரை பணிக்கு வராமல் இருந்த ஒப்பந்த ஊழியா்கள் 29 பேருக்கு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. பொதுமுடக்கக் காலத்தில் பணிக்கு வராமல் இருந்த ஒப்பந்த ஊழியா்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும். தலைமை தபால் நிலைத்தில் தபால் பிரிக்கும் பிரிவில் பணியாற்றும் ஊழியா்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தபால் ஊழியா்கள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT