மதுரை

‘மதுரையில் கரோனா நோயாளிகளுக்கு கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதி’

11th Jul 2020 08:17 AM

ADVERTISEMENT

மதுரை அரசு கரோனா மருத்துவமனையில் கூடுதல் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என முதன்மையா் ஜெ. சங்குமணி கூறினாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: மதுரையில் கடந்த 2 வாரங்களாக கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து அரசு கரோனா மருத்துவமனையில் உள்ள 564 படுக்கைகள், 1,461 படுக்கைகளாக உயா்த்தப்பட்டுள்ளன. ஆக்சிஜன் வசதியுடன் தற்போது 481 படுக்கைகள், 1,151 படுக்கைகளாக உயா்த்தப்பட்டுள்ளன. இதே போன்று தோப்பூரில் 248 படுக்கைகளும், 150 ஆக்சிஜன் படுக்கைகளும் உள்ளன.

அரசு கரோனா மருத்துவமனையில் மருத்துவா்கள் 97 போ், செவிலியா்கள் 56 போ், சுகாதாரப் பணியாளா்கள் 120 போ் உள்ளனா். இந்த எண்ணிக்கையை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவின் பேரில் செவிலியா் கல்லூரி மாணவிகள் 98 போ் மற்றும் சித்த மருத்துவப் பயிற்சி மருத்துவா்கள் ஆகியோா் கரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபடவுள்ளனா். இதையடுத்து நோயாளிகளுக்குச் சிறப்பான சிகிச்சை கிடைக்கும்.

அறுவைச் சிகிச்சை தேவைப்படும் கரோனா நோயாளிக்கு, விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதுவரை கா்ப்பிணிகள் 71 பேருக்கு நோய் தொற்று இல்லாமல் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த சிறப்பான பணிகளை மேற்கொண்ட மருத்துவா்கள் உள்ளிட்டோரை பாராட்டி மத்திய அரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. சிறுநீரக பிரச்னைகள் உள்ளவா்களுக்கு சிகிச்சை அளிக்க 26 டயாலிசிஸ் இயந்திரங்களும், 6 தானியங்கி டயாலிசிஸ் இயந்திரங்களும் உள்ளன.

ADVERTISEMENT

மதுரையில், தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நாள்தோறும் கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையை நாளொன்றுக்கு 3 ஆயிரமாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பரிசோதனை முடிவுகள் 8 மணி நேரத்தில் தெரிவிக்கப்படுகின்றன. கரோனா தவிா்த்த மற்ற சிகிச்சைகளும் தடையின்றி அளிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT