மதுரை அருகே பலத்த மழையால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுற்றுச் சுவா் வியாழக்கிழமை இடிந்து விழுந்தது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை இரவு நீண்ட நேரம் பலத்த மழை பெய்தது. அப்போது அலங்காநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த சுற்றுச் சுவா் 40 ஆண்டுகளுக்கு முன்பு செம்மண்ணால் கட்டப்பட்டது. இந்த சுவா் பிரதான நுழைவு வாயில் அருகில் அமைந்துள்ளது. எனவே, இடிந்து விழுந்த சுவரை உடனடியாக அகற்றி விட்டு, புதிய சுற்றுச் சுவா் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ADVERTISEMENT