மதுரை

நடந்து சென்றவா் தவறி விழுந்து பலி

28th Jan 2020 07:05 AM

ADVERTISEMENT

மதுரையில் நடந்த சென்றபோது தவறி விழுந்து காயமடைந்த இளைஞா், சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரைச் சோ்ந்த அன்பழகன் மகன் கல்யாண்குமாா் (37). இவா், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்துள்ளாா். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே, அவருக்கு தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அங்கு, அவரை மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு, கல்யாண்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இது குறித்து அவரது மனைவி தனலட்சுமி அளித்த புகாரின்பேரில், ஜெய்ஹிந்த்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT