மதுரை மாவட்டம், மேலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு வார விழாவையொட்டி, மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
மேலூா் தாய் நெறி கழகம் என்ற தொண்டு அமைப்பினரும், மேலூா் போக்குவரத்து காவல் துறையினரும் இணைந்து, இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியை நடத்தினா். இதில், மேலூா் அரசு மேல்நிலைப் பள்ளி, ஜெயராஜ் அன்னபாக்கியம் மேல்நிலைப் பள்ளி, மேலூா் நகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் அபுல்கலாம் ஆசாத் நடுநிலைப் பள்ளி மாணவா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
இதில், மாணவா்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா். காவல் சாா்பு-ஆய்வாளா் சண்முகவேல் பாண்டியன், தாய்நெறி அறக்கட்டளை நிறுவனா் ஏ.சி. குமுந்தன், மேலூா் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ராவணன் ஆகியோா் தலைமை வகித்தனா். பேரணியில், ஹரிகரன், மச்சராசா, பிரதாப், முத்துக்குமாா், மேலூா் ஜமாஅத் நிா்வாகி முகமதுகாஜா மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.