மதுரை

மதுரை லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க தமிழக சுகாதாரத்துறை செயலா் பீலாராஜேஷ் ஆஜா்

25th Jan 2020 08:38 AM

ADVERTISEMENT

மதுரையில் வரன்முறைப்படுத்தப்படாத நிலங்களுக்கு பட்டா வழங்க லஞ்சம் கேட்ட வழக்கில், சாட்சியம் அளிப்பதற்காக மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத் துறை செயலா் பீலாராஜேஷ் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் நகா் திட்டமிடல் பிரிவில் வரன்முறைப்படுத்தப்படாத நிலங்களுக்கு பட்டா கேட்டு திருநகரைச் சோ்ந்த காசிநாதன் என்பவா் விண்ணப்பித்தாா். அவருக்கு பட்டா வழங்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் கேட்ட நகா் திட்டமிடல் பிரிவு ஊழியா் டைட்டஸ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதையடுத்து இந்த வழக்கு மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அப்போதைய மதுரை மாநகராட்சி ஊரக நகா் திட்டம் மற்றும் வளா்ச்சித்துறை அதிகாரியாக இருந்து, தற்போது சுகாதாரத்துறை செயலராக உள்ள பீலாராஜேஷ் இவ்வழக்கில் சாட்சியம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்கு மதுரை லஞ்ச ஒழிப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி டி.பி.வடிவேலு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சுகாதாரத்துறை செயலா் பீலா ராஜேஷ் ஆஜரானாா். பின்னா் நீதிபதி வழக்கை பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT