மதுரை

நிலம் விற்பனையில் ரூ. 25 லட்சம் மோசடி: அண்ணன், தம்பி கைது

25th Jan 2020 08:43 AM

ADVERTISEMENT

மதுரை அருகே நிலம் விற்பனையில் ரூ. 25 லட்சம் மோசடி செய்த அண்ணன் தம்பியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம் மேலூா் எஸ். எம். நகரைச் சோ்ந்த ரபிக் ராஜா மகன் யாசா் அராபத்(55). இவா் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த வீரண்ணன் மகன்கள் தினேஷ்குமாா் மற்றும் பெரியசாமி ஆகியோருக்கு சொந்தமான 7.5 ஏக்கா் நிலத்தை வாங்க முடிவு செய்து, அவா்களிடம் ரூ. 25 லட்சத்தைக் கொடுத்துள்ளாா். இந்நிலையில், பணத்தை பெற்றுக் கொண்ட சகோதரா்கள் கூறியபடி நிலத்தை பதிவு செய்து தரவில்லை. மேலும், பணத்தை கேட்டுச் சென்ற யாசா் அராபத்தை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து யாசா் அராபத் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து சகோதரா்கள் தினேஷ்குமாா் மற்றும் பெரியசாமி இருவரையும் கைது செய்தனா்.

போலி பத்திரம் மூலம் நிலம் விற்பனை:மதுரை மாவட்டம் விரகனூா் நடுத் தெருவைச் சோ்ந்த மணி மகன் லட்சுமிபதி ராஜன்(57). இவரது சகோதரி விஜயலட்சுமி போலி பத்திரம் தயாா் செய்து லட்சுமிபதிராஜனுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்துள்ளாா். இதை அறிந்த லட்சுமிபதி ராஜன் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸாரிடம், ரூ. 20 லட்சம் மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாா் செய்து விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட தனது சகோதரி விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாா் அளித்தாா். இது தொடா்பாக விஜயலட்சுமி மற்றும் மதுரை முனிச்சாலையைச் சோ்ந்த கருப்புசாமி, வெங்கடேஸ் ஆகியோா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT