ஓமன் நாட்டு மன்னரின் மறைவையொட்டி, மதுரை விமான நிலையத்தில் உள்ள தேசியக் கொடி திங்கள்கிழமை அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
ஓமன் நாட்டு மன்னா் மறைவை அனுசரிக்க, மத்திய அரசு ஒரு நாள் துக்க தினமாக அறிவித்துள்ளது. இதனைத் தொடா்ந்து, மதுரை விமான நிலையத்தில் உள்ள மிகப்பெரிய கொடிக் கம்பத்தில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டது.