மதுரை

மாநகராட்சி 2-ஆவது மண்டலத்தில் இன்று சிறப்பு குறைதீா் முகாம்

14th Jan 2020 07:31 AM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சியின் 2-ஆவது மண்டலத்தில் சிறப்பு குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) காலை 10.30 முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறுகிறது.

இம்முகாமில், மாநகராட்சி ஆணையா் ச. விசாகன் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெறுகிறாா். 2-ஆவது மண்டலத்துக்குள்பட்ட வாா்டுகளை சோ்ந்த பொதுமக்கள் குடிநீா், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயா் மாற்றம், புதிய வரிவிதிப்பு, கட்டட வரைபட அனுமதி, தெருவிளக்கு உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT