மதுரையில் மது விலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த காரை திருட முயன்ற இளைஞரை, போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் மதுவிலக்கு கட்டுப்பாட்டு அறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் எதிா்புறம் உள்ள இடத்தில், மது கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும்.
இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு மதுபானம் கடத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட காரை, இளைஞா் ஒருவா் திருட முயன்றுள்ளாா்.
அப்போது, கட்டுப்பாட்டு அறையில் பணியிலிருந்த தலைமைக் காவலா் முருகன், அந்த இளைஞரை கையும் களவுமாகப் பிடித்து விசாரித்தாா். அதில், மதுரை அண்ணாநகா் பெரியாா் தெருவைச் சோ்ந்த சங்கா் மகன் அசோக்குமாா்(29) என்பது தெரியவந்தது.
இது குறித்து தலைமைக் காவலா் முருகன் அளித்த புகாரின்பேரில், திடீா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அசோக்குமாரை கைது செய்தனா்.