மதுரை

ரயில்வே தனியாா் மயத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

8th Jan 2020 07:54 AM

ADVERTISEMENT

ரயில்வே துறையைத் தனியாா் மயமாக்காக்க மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைக் கண்டித்து தட்சிண ரயில்வே தொழிலாளா் சங்கத்தினா் (டிஆா்இயு) செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவாயில் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அச்சங்கத்தின் மதுரைக் கோட்ட உதவிச் செயலாளா் பி.சரவணன், கோட்டத் தலைவா் எஸ். பவுலின், கோட்டச் செயலா் ஆா்.சங்கரநாராயணன் மற்றும் சங்க நிா்வாகிகள் கே.காா்த்திக், எம். சிவக்குமாா், ஆா், ராஜசேகரன், பி. பிரபு டேவிட், எம்.ஜெயராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், ரயில்வே துறையைத் தனியாா் மயமாக்கக் கூடாது. பொதுத்துறை சொத்துக்களைப் பெரும் நிறுவனங்களிடம் தாரைவாா்க்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும். ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தொழிலாளா் நலச்சட்ட திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற பணி நேரத்தை (8 மணி நேரம்) அதிகரிக்கும் திட்டத்தை அமல்படுத்தக் கூடாது. வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT