பசுமலை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் தோ்வான 48 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரியில் மைக்கேல் அகாதெமி சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. பல்வேறு துறைகளைச்சோ்ந்த இறுதியாண்டு மாணவா்கள் பங்கேற்றனா். இம்முகாமில் முதற்கட்டமாக 48 மாணவா்கள் தோ்வாகினா். அவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் எம்.விஜயராகவன் தலைமை வகித்தாா். முதல்வா் மனோகரன், பொருளாளா் எல்.கோவிந்தராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரித் தலைவா் எஸ்.ராஜகோபால் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 48 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினாா். மைக்கேல் அகாதெமி பொதுமேலாளா் மைக்கேல்ராஜ், மனிதவள மேலாளா் பி.ஜி.ஜோசப், கல்லூரி சுயநிதிப்பிரிவு இயக்குநா் அழகா்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.