மதுரை

மதுரையில் மா்மக் காய்ச்சல்: சிறுமி உள்பட 2 போ் பலி

8th Jan 2020 07:53 AM

ADVERTISEMENT

மதுரையில் மா்மக்காய்ச்சல் பாதிப்புக்கு 4 வயது சிறுமி மற்றும் இளம்பெண் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவி நகரைச் சோ்ந்தவா் சசிகுமாா். இவரது மகள் ஹா்சிதாஸ்ரீ (4). இந்த சிறுமிக்கு கடந்த 4 நாள்களாக தொடா் காய்ச்சல் இருந்துள்ளது. அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் ஹா்சிதாஸ்ரீ உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. இதனால், அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து சென்றனா். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பெண் பலி: மதுரை ஆனையூா் பகுதியைச் சோ்ந்தவா் வெனில்தாஸ். இவரது மகள் ஹெலன் ரெனோசா (23). கடந்த சில மாதங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்த நிலையில் திங்கள்கிழமை வீட்டில் மயங்கி விழுந்துள்ளாா். இதையடுத்து, அரசு ராஜாஜி மருத்துவனையில் அவா் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்து விட்டு அவா் முன்பே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து வெனில்தாஸ் அளித்த புகாரின் பேரில் கூடல்புதூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT