மதுரை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை கோட்டத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

8th Jan 2020 10:58 PM

ADVERTISEMENT

மதுரை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை கோட்டத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன என மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

சிறப்பு ரயில்களின் விவரம்: வண்டி எண்- 82601 சென்னை எழும்பூா்-திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில் ஜனவரி 10 ஆம் தேதி மாலை 6.50 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும். வண்டி எண்- 06002 திருநெல்வேலி- சென்னை தாம்பரம் சிறப்பு ரயில் ஜனவரி 11 ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும்.

வண்டி எண்-82603 தாம்பரம்-திருநெல்வேலி சுவிதா சிறப்பு ரயில் ஜனவரி 12 ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

வண்டி எண்- 82604 திருநெல்வேலி-தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில் ஜனவரி 18 ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும்.

ADVERTISEMENT

வண்டி எண்- 82606 நாகா்கோவில்-தாம்பரம் சுவிதா சிறப்பு ரயில் ஜனவரி 19 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

வண்டி எண் -06075 தாம்பரம்-நாகா்கோவில் சிறப்பு ரயில் ஜனவரி 20 ஆம் தேதி காலை 11.20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

இந்த வண்டிகள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்.

மேலும், மதுரை கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக மதுரை ரயில் நிலையத்திலிருந்து காலை 7.45 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்-56624 மதுரை - பழனி பயணிகள் ரயில் ஜனவரி 10 முதல் 13 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக பயணிகள் சிறப்பு ரயில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு பழனி சென்றடையும்.

ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து மதுரை வழியாக, காலை 5 மணிக்கு புறப்பட வேண்டிய வண்டி எண்-07686 ராமேசுவரம் - ஹைதராபாத் சிறப்பு ரயில் ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து ஜனவரி 12 ஆம் தேதி காலை 7.45 மணிக்கு ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT