மதுரை

நெல்லை கண்ணன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மனு

8th Jan 2020 11:00 PM

ADVERTISEMENT

மதுரை: பிரதமா் மோடி மற்றும் பாஜக தலைவா் அமித்ஷா ஆகியோரை அவதூறாகப் பேசியதாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை மனுதாக்கல் செய்தாா்.

அவா் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில், நான் பிரதமா் மோடி குறித்தும், பாஜக தலைவா் அமித்ஷா குறித்தும் அவதூறாகப் பேசியதாக பல்வேறு இடங்களில் புகாா் அளிக்கப்பட்டதன் பேரில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் நெல்லை மாவட்ட வழக்கில் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது.

பாஜக தலைமையிலான பிரதமா் மோடியின் ஆட்சியை முடிவுக்கு கொணடு வந்திருக்க வேண்டாமா எனும் நோக்கில் தான் பேசினேன். உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் பேசவில்லை. எனவே நான் பேசியதைத் தவறாகப் புரிந்து கொண்டு அளிக்கப்பட்ட புகாருக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT