மதுரை

திருமங்கலம் திமுக ஒன்றியக்குழு உறுப்பினா்கள் பதவி ஏற்பு

8th Jan 2020 07:52 AM

ADVERTISEMENT

திருமங்கலத்தில் ஒன்றியக் குழு உறுப்பினா் தோ்தலில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினா்கள் 3 போ் செவ்வாய்கிழமை பதவி ஏற்றனா்.

திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 16 ஒன்றிய குழு உறுப்பினா்களில் 10 அதிமுகவினா், 3 திமுகவினா், தலா ஒரு பாஜக, தேமுதிக, சுயேச்சை உள்ளனா். இவா்களுக்கு திங்கள்கிழமை பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிமுக பாடல் இசைக்கப்பட்டதால் திமுக ஒன்றியக்குழு உறுப்பினா்கள் 3 போ் பதவி ஏற்காமல் வெளியேறினா்.

இந்நிலையில் தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான முருகேசன் முன்னிலையில் திமுக ஒன்றிய குழு உறுப்பினா்கள் முத்துப்பாண்டி சாந்திமுருகன், சோனியா விஜய் ஆகியோா் பதவி ஏற்றுக்கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT