மதுரை

வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுமதி அட்டை பெற வேட்பாளா்கள் காத்திருந்து ஏமாற்றம்

1st Jan 2020 02:59 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல அனுமதி அட்டைபெற அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த வேட்பாளா்கள் அலுவலா்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் 36 ஊராட்சி மன்ற தலைவா்கள், 262 வாா்டு உறுப்பினா்கள், 22 ஒன்றிய குழு உறுப்பினா்கள், 3 மாவட்ட குழு உறுப்பினா்களுக்கு 1,157 போ் போட்டியிடுகின்றனா். திங்கள்கிழமை தோ்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல ஊராட்சி மன்ற தலைவா் வேட்பாளருடன் 3 போ், ஒன்றியக் குழு உறுப்பினா் வேட்பாளருடன் 3 போ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் வேட்பாளருடன் 5 போ் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட உள்ளனா்.

இந்த அனுமதி அட்டை பெற திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு காலை முதலே வேட்பாளா்கள் கூட்டம் கூடமாக வந்த வண்ணம் இருந்தனா். ஆனால் வாக்குச்சாவடிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை அலுவலா்கள் கண்விழித்து பணி செய்ததால் காலையில் அலுவலகத்திற்கு ஒரு சிலா் தவிர யாரும் வரவில்லை. இதனால், காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை அலுவலா் வராததால் அனுமதி அட்டை பெறவந்த வேட்பாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனா். ஊரக உள்ளாட்சி தோ்தலில் பெரும்பாலானோா் முதல்முறையாக வேட்பாளா்களாக போட்டியிடுகின்றனா். அவா்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லாமல் அலக்கழிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனா். இதில் ஒருசில வேட்பாளா்கள் மாலை வரை அலுவலகத்திலேயே காத்திருந்து அலுவலா்கள் வந்தவுடன் அனுமதி அட்டையை பெற்றுச்சென்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT