மதுரை மாவட்டம் பேரையூா் அருகே புதன்கிழமை கேணி பகுதியில் குளிக்கச் சென்ற இளைஞா் தவறி விழுந்து பலியானாா்.
பேரையூா் அருகே சேடப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்டது சாப்டூா். இந்த ஊரை சோ்ந்த சந்தானம் மகன் செல்வம் (25). திங்கள்கிழமை இரவு சாப்டூா் அருகே மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பச்சைமலையப்பன்சாமி கோவில் அருகில் உள்ள கேணியில் குளிக்க சென்றுள்ளாா்.
அப்போது அங்குள்ள கேணி பள்ளத்தில் தண்ணீா் ஆழமுள்ள பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினாா். செல்வத்தை அருகில் உள்ளவா்கள் மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனா்.அங்கு பரிசோதித்த மருத்துவா் செல்வம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
மேலும் செல்வதற்கு நீச்சல் தெரியாது எனவும் கூறப்படுகிறது. இவரது சடலம் உசிலம்பட்டி அரசு மருத்துமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சாப்டூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனா்.