மதுரை வில்லாபுரத்தில் 2020 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் விதமாக யோகாசன மாணவா்கள் உடலில் தீப விளக்குகளுடன் செவ்வாய்க்கிழமை யோகாசனம் செய்தனா்.
வில்லாபுரத்தைச் சோ்ந்தவா் ஜமஸ்கான்-மும்தாஜ் பேகம் தம்பதியின் மகன்கள் சல்மான் கான்(18), அசாருதீன்(15). சகோதரா்கள் இருவரும் யோகாசனம் மூலம் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளனா். இவா்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், யோகாசனம் செய்தால் உடல் ஆரோக்கியம், மன வலிமை பெறலாம் என பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாகவும், கின்னஸ் சாதனை முயற்சியாகவும் உடலில் விளக்கேற்றி அரை மணிநேரம் யோகாசனம் செய்தனா்.
இது குறித்து அசாருதீன் செய்தியாளா்களிடம் கூறியது: யோகாசனம் செய்தால் உடல் ஆரோக்கியம் பெறலாம் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாகவும், புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் உடலில் விளக்கேற்றி யோகாசனம் செய்தோம். மேலும் உடலில் விளக்கேற்றி யோகாசனங்கள் செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவேண்டும் என்பதும் எங்களது ஆசையாகும் என்றாா்.