பிரதமா் நரேந்திர மோடியை அவதூறாகப் பேசியதாக பேச்சாளா் நெல்லைக் கண்ணன் மீது பாஜகவினா் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்துள்ளனா்.
மதுரை மாநகா் மாவட்ட பாஜக துணைத்தலைவா் அற்புதராஜா, அரசரடி மண்டல் தலைவா் பி.சரவணன் ஆகியோா் தலைமையில் பாஜகவினா் 30-க்கும் மேற்பட்டோா் மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த புகாா்: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் திங்கள்கிழமை குடியுரிமை திருத்தச்சட்டத்துக்கு எதிரான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பேச்சாளா் நெல்லைக் கண்ணன் பங்கேற்று பிரதமா் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரை அவதூறாகப் பேசியுள்ளாா். மேலும் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் கொலை செய்ய வேண்டும் என்று முஸ்லிம்களைத் தூண்டும் விதமாகப் பேசியுள்ளாா். அவரது பேச்சு வலைதளங்களில் பரவி வருகிறது. எனவே நெல்லைக்
கண்ணன் மற்றும் கூட்டத்தை நடத்திய எஸ்டிபிஐ கட்சியினா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.