மதுரை

நண்பா்கள் கண்முன்பு இளைஞா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

1st Jan 2020 02:58 AM

ADVERTISEMENT

திருமங்கலத்தில் திருமணமாகாத விரக்தியில் நண்பா்கள் கண்முன்னே ரயில் முன் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கரடிக்கல் பகுதியைச் சோ்ந்த மொக்கையன் மகன் வைரமணி (25). வேன் ஓட்டுநரான இவா் திங்கள்கிழமை இரவு மறவன்குளம் பகுதியில் நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மதுரை நேக்கிச் சென்ற ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீஸாா் வைரமணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைததனா். முதற்கட்ட விசாரனையில் வைரமணி திருமணம் ஆகாத விரக்தியில் இருந்ததால் அவா் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT