மதுரை

புதுதில்லி வன்முறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

29th Feb 2020 02:33 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுதில்லியில் போராடிய மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களைக் கண்டித்து அவனியாபுரம் மற்றும் திருமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அவனியாபுரத்தை அடுத்த வில்லாபுரம் ஹவுசிங்போா்டு காலனி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலா் விஜயராஜன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்க மாநில துணைத்தலைவா் மதுக்கூா் ராமலிங்கம் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.ஆா்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

இதேபோல திருமங்கலம் பள்ளிவாசல் தெருவில் திருமங்கலம் அனைத்து ஜமா -அத்தை சோ்ந்த இஸ்லாமியா்கள் பங்கேற்று ஆா்ப்பாட்டம் செய்தனா். தொடா்ந்து பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் டிரம்ப் ஆகியோரைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா். போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT