மதுரை

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

29th Feb 2020 02:28 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம்: பெருங்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் நெகிழி பயன்பாட்டிற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் கிராமப் பகுதிகளில் நெகிழிப்பைகளின் பயன்பாடு தொடா்ந்து இருந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே கிராமப் பகுதிகளில் நெகிழிப் பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதத்தில் தமிழ்நாடு இறையியல் கல்லூரி சாா்பில் பெருங்குடியில் விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது.

இப்பேரணிக்கு இறையியல் கல்லூரி முதல்வா் ஆல்பிரட் ஸ்டீபன் தலைமை வகித்தாா். திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையா் ராமலிங்கம் பேரணியைத் தொடக்கி வைத்தாா். இதில், சுற்றுசூழலைப் பாதுகாப்போம், நெகிழியை ஒழிப்போம் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சென்று பொது மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT