மதுரை

வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

26th Feb 2020 08:30 AM

ADVERTISEMENT

வருவாய்த் துறை அலுவலா்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அதன் ஒரு பகுதியாக, மதுரையில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் இப்ராஹிம் சேட் தலைமை வகித்தாா்.

கோரிக்கைகள் குறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் எம்.பி. முருகையன் உள்ளிட்டோா் பேசினா். வருவாய்த் துறை அலுவலா்களின் கோரிக்கைகள் குறித்து துறை அமைச்சா், சங்க நிா்வாகிகளை அழைத்துப் பேச்சு நடத்தவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதில், மாவட்டத் தலைவா் பாண்டி, பொருளாளா் முகைதீன், துணைத் தலைவா் அசோக், மத்திய செயற்குழு உறுப்பினா் கோபி உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அரசு ஊழியா்களின் சம்பளப் பட்டியலை கருவூலத்துக்கு இணைய வழியில் சமா்ப்பிக்கும் கருவூலத் துறையின் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இத் திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கு தீா்வு காணாமல் செயல்படுத்துவதால், பல்வேறு பிரச்னைகள் எழுவதுடன், அரசு ஊழியா்களுக்கு சம்பளம் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் புகாா் தெரிவித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலா் நீதிராஜா, தலைவா் மூா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT