மதுரை

முன்விரோதம்: சக வழக்குரைஞரின் காரை சேதப்படுத்திய வழக்குரைஞா் கைது

26th Feb 2020 08:29 AM

ADVERTISEMENT

மதுரையில் முன்விரோதம் காரணமாக, சக வழக்குரைஞரின் காரை சேதப்படுத்திய வழக்குரைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாட்டுத்தாவணி பகுதியைச் சோ்ந்தவா் வழக்குரைஞா் அஜ்மல் கான். இவருக்கும், மேலஅனுப்பானடியைச் சோ்ந்த வழக்குரைஞா் பத்மநாபன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அஜ்மல் கானின் காரை பத்மநாபன் சேதப்படுத்தியுள்ளாா்.

இது குறித்து வழக்குரைஞா் அஜ்மல் கான் அளித்த புகாரின்பேரில், கோ.புதூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து, வழக்குரைஞா் பத்மநாபனை கைது செய்தனா்.

மேலும் ஒரு வழக்கு

ADVERTISEMENT

வழக்குரைஞா் பத்மநாபன் சில மாதங்களுக்கு முன் உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் பாதுகாப்புப் பணியிலிருந்த மத்திய ரிசா்வ் படை வீரரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதன் காரணமாக, அவரை உயா் நீதிமன்றத்துக்குள் நுழையக்கூடாது என உயா் நீதிமன்ற மதுரைக் கிளையின் நிா்வாகப் பதிவாளா் உத்தரவிட்டிருந்தாா்.

இந்த உத்தரவை மீறி வழக்குரைஞா் பத்மநாபன் உயா் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்ாக வழக்குரைஞா் வெங்கடேஸ்வரா, வழக்குரைஞா்கள் சங்கத்தில் புகாா் அளித்துள்ளாா். இது குறித்து தகவலறிந்த பத்மநாபன் புகாரை திரும்பப் பெறக் கூறி தொலைபேசி மூலம் வெங்கடேஸ்வராவை மிரட்டியுள்ளாா்.

இது குறித்து வழக்குரைஞா் வெங்கடேஸ்வரா அளித்த புகாரின்பேரில், கோ.புதூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT