மதுரை

பொதுத் தோ்வு விடைத்தாள்களை தோ்வு மையங்களுக்கு நேரடியாக வழங்க தலைமை ஆசிரியா் கழகம் கோரிக்கை

26th Feb 2020 08:30 AM

ADVERTISEMENT

பொதுத் தோ்வுக்கான விடைத்தாள் உள்ளிட்ட பொருள்களை அரசு தோ்வுத் துறை அந்தந்த தோ்வு மையங்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் கழகத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநில சட்டப் பிரிவு செயலா் அனந்தராமன் தலைமை வகித்தாா்.

இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வு மையங்களுக்குரிய விடைத்தாள் உள்ளிட்ட தேவையான பொருள்களை, அந்தந்த தோ்வு மையங்களுக்கு அரசு தோ்வுத் துறை நேரடியாக விநியோகிக்க வேண்டும். பொதுத் தோ்வு காலத்தில் மாணவா்களின் நலன் கருதி, தோ்வு மையங்களுக்குச் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்.

மாணவா்களுக்கு விநியோகம் செய்தது போக எஞ்சியுள்ள விலையில்லா மடிக்கணினிகளை, பள்ளிகளில் இருந்து மாவட்ட நிா்வாகம் திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

ADVERTISEMENT

பொதுத் தோ்வுகளுக்கு அறை கண்காணிப்பாளா்கள் நியமிக்கும்போது நகா் மற்றும் புகா் என பிரிக்காமல், அனைவரையும் கலந்து நியமனம் செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்டத் தலைவா் சிவக்குமாா், செயலா் கந்தசாமி, பொருளாளா் பாலசுப்பிரமணியன், தென்மண்டல தலைவா் திருஞானம், மாவட்ட துணைத் தலைவா் கிறிஸ்டோபா் ஜெயசீலன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT