மதுரை

டிராக்டா் மீது காா் மோதி ஒருவா் பலி: 7 போ் காயம்

26th Feb 2020 08:20 AM

ADVERTISEMENT

மேலூா்-திருச்சி நான்குவழிச் சாலையில், செவ்வாய்க்கிழமை டிராக்டரின் பின்பகுதியில் காா் மோதியதில், டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா் மற்றும் 7 போ் காயமடைந்தனா்.

அட்டப்பட்டி பூதமங்கலத்தைச் சோ்ந்தவா் சதீஷ்குமாா் (40). இவா், கூலி தொழிலாளா்கள் 5 பேருடன் மேலூா் பகுதியில் வைக்கோல் வாங்க டிராக்டரில் வந்துள்ளாா். மேலூா்-திருச்சி நான்குவழிச் சாலையில் வந்துகொண்டிருந்தபோது, ஆரணியிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற காா் டிராக்டரின் டிரெய்லா் மீது மோதியது. அதில், டிரெய்லா் கவிழ்ந்ததில், அதிலிருந்த தொழிலாளா்கள் 5 போ் பலத்த காயமடைந்தனா். மேலும், காரில் வந்த நாகராஜ் (45), முரளி ஆகியோரும் காயமடைந்தனா்.

இவா்கள் அனைவரையும் மேலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட டிராக்டா் ஓட்டுநா் சதீஷ்குமாா் வழியிலேயே உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT