மதுரை

ஜெயலலிதா பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்கக் கோரிய மனு தள்ளுபடி

26th Feb 2020 08:26 AM

ADVERTISEMENT

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை, அரசு விழாவாக அறிவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த அதிமுகவின் மாவட்ட மாணவரணி பொருளாளா் மணிமாறன் தாக்கல் செய்த மனு: மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, 11 ஆண்டுகளாக தமிழக முதல்வராக இருந்தவா். மேலும், 1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளாா். அவா் உள்ளாட்சித் தோ்தல்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை உருவாக்கியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளாா்.

அவரின் நிா்வாகத் திறனைப் பாராட்டி பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தனது தனித்துவமான திறமையினால் உலகின் மிகச்சிறந்த தலைவா்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளாா். இத்தகையச் சிறப்புமிக்க அவரின் பிறந்த நாளை, அரசு விழாவாக அறிவிக்கக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே, ஜெயலலிதா பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க உத்தரவிடவேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு, நீதிபதிகள் எம். துரைசுவாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரா் பொருத்தமான காரணமின்றி வழக்கைத் தொடா்ந்துள்ளாா் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT