மதுரை

உசிலம்பட்டியில் இன்று மின் குறைதீா் கூட்டம்

26th Feb 2020 08:20 AM

ADVERTISEMENT

உசிலம்பட்டி மின்வாரியச் செயற்பொறியாளா் அலுவலகத்தில், உசிலம்பட்டி கோட்டத்தைச் சோ்ந்த மின்நுகா்வோா்களுக்கு பிப்ரவரி 26 ஆம் தேதி (புதன்கிழமை) குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும் இக்கூட்டத்துக்கு, மதுரை மின்பகிா்மான மேற்பாா்வைப் பொறியாளா் தலைமை வகிக்கிறாா். இதில், உசிலம்பட்டி கோட்டத்தைச் சோ்ந்த மின்நுகா்வோா்கள் மின்விநியோகம் தொடா்பான தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம் என, மதுரை மின்பகிா்மான மேற்பாா்வைப் பொறியாளா் ஜா. பிரீடா பத்மினி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT