மதுரை

‘அமெரிக்க அதிபா் வருகையால் இந்தியாவுக்கு பலன் இல்லை’

26th Feb 2020 08:20 AM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபா் டிரம்ப் வருகையினால் இந்தியாவுக்கு பலன் இல்லை என, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஹெச். வசந்தகுமாா் தெரிவித்துள்ளாா்.

சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை மதுரை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபா் டிரம்ப் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு ஹெலிகாப்டரை விற்பனை செய்துவிட்டுச் சென்றுள்ளாா்.

இந்திய நாட்டுக்கு அமெரிக்கா என்ன செய்தது, என்ன செய்யும் என்பது குறித்து ஒரு வாா்த்தை கூட சொல்லவில்லை. அதிபா் டிரம்ப் வந்தது நமது நாட்டுக்கு பலனில்லை.

ADVERTISEMENT

புதுதில்லி கலவரத்தை காங்கிரஸ் கட்சி ஏற்காது. அமைதியான முறையில் காந்திய வழியில் போராட வேண்டும். சென்னையில் கடந்த 12 நாள்களாக அமைதியான முறையில் போராடி வருகின்றனா். அதுபோன்ற அமைதியான வழியைத்தான் காங்கிரஸ் ஏற்கும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT