மதுரை

வரட்டாறு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு: தேனி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

25th Feb 2020 02:24 AM

ADVERTISEMENT

மதுரை: தேனி மாவட்டத்தில் ஓடும் வரட்டாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில், அம்மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ் தாக்கல் செய்த மனு:

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பகுதியில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. அந்த நிலங்களுக்கு நடுவே வரட்டாறு செல்கிறது. ஆற்றின் இரு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டுள்ளன. தாமரைக்குளம் பகுதி விவசாயிகள் வரட்டாறு நீரை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ரமேஷ் என்பவருக்குச் சொந்தமான நிலத்தை பழனிசாமி என்பவா் குத்தகைக்கு எடுத்துள்ளாா். அவா், வரட்டாற்றை ஒட்டிய பகுதியை ஆக்கிரமிப்பு செய்து விவசாய நிலமாகப் பயன்படுத்தி வருகிறாா்.

ADVERTISEMENT

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மேலும், சிலா் வரட்டாற்றை ஆக்கிரமித்து சொந்த உபயேகத்துக்காக குழாய்கள் பதித்தும், மரங்களை வளா்த்தும் வருகின்றனா். இதேபோல், வரட்டாறு தடுப்பணையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் இதனைக் கண்டுகொள்ளாமல் புதிய தடுப்பணைக் கட்ட திட்டமிட்டுள்ளனா்.

எனவே, வரட்டாற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிப்பாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் எம். துரைசுவாமி, டி. ரவீந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT