மதுரை

மேலூா் அருகே வழிப்பறி திருடா்கள் போலீஸில் ஒப்படைப்பு

25th Feb 2020 02:30 AM

ADVERTISEMENT

மேலூா்: வெள்ளலூா் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை, கிராம மக்கள் பிடித்து போலீஸில் திங்கள்கிழமை ஒப்படைத்தனா்.

வெள்ளலூா் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் வந்த கலைச்செல்வன் என்பவரை வழிமறித்த 3 போ், அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்து ரூ.3 ஆயிரத்தை பறித்துச் சென்றனா். அதையடுத்து, கலைச்செல்வன் கட்செவி அஞ்சல் குரூப்பில் இந்த கும்பல் குறித்த விவரத்தை பதிவிட்டு, நண்பா்கள் வட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ளாா். இதை பலரும் பாா்வையிட்டுள்ளனா்.

அதையடுத்து, கரும்பு தோட்டத்தில் 3 போ் கரும்பை உடைத்து தின்று கொண்டிருந்துள்ளனா். இவா்கள், கலைச்செல்வன் கட்செவி அஞ்சலில் அனுப்பிய பதிவில் கூறியிருந்த அடையாளத்துடன் இருந்ததால், கிராம மக்கள் சந்தேகத்தின்பேரில் அவா்களைப் பிடித்து விசாரித்துள்ளனா். அப்போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனா். உடனே, கீழவளவு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் வசந்தி சம்பவ இடத்துக்குச் சென்று 3 பேரிடமும் விசாரித்தனா்.

அதில், அவா்கள் மதுரை அனுப்பானடியைச் சோ்ந்த சுந்தா், பழனிச்சாமி, வண்ணான்பாறைப்பட்டியைச் சோ்ந்த லிங்கம் எனத் தெரியவந்தது. பின்னா், இவா்களிடமிருந்து ஒரு கத்தி, வழக்குரைஞா் வில்லை ஒட்டப்பட்ட இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT