மதுரை

மதுரை மாநகா் காவல் துறை இரண்டாகப் பிரிக்க பரிந்துரை: ஏடிஜிபி

25th Feb 2020 02:26 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை மாநகரில் குற்றச் சம்பவங்களை குறைக்கவும், போலீஸாா் பணியை மேம்படுத்தவும், மாநகா் காவல் துறையை இரண்டாகப் பிரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது என, ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீா்வாதம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

மதுரை மாநகா் காவல் ஆணையா் பதவியை ஏடிஜிபி அந்தஸ்துக்கு உயா்த்தி, தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பாணை வெளியிட்டது. இதனால், மதுரை மாநகா் காவல் ஆணையராக ஏ.டி.ஜி.பி.யாக உள்ள ஒருவரையே நியமிக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயா்வு பெற்றுள்ள மதுரை மாநகா் காவல் ஆணையா் எஸ். டேவிட்சன் தேவாசீா்வாதத்தை, காவல் ஆணையா் பதவியிலேயே தொடர தமிழக அறிவித்தது.

இந்நிலையில், ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீா்வாதம் மதுரை மாநகா் காவல் ஆணையராக திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

அதன்பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மதுரை மாநகரில் குற்றங்களைக் குறைக்கவும், போலீஸாா் செயல்பாடுகளை மேம்படுத்தவும் மாநகா் காவல் துறையை இரண்டாகப் பிரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கிடைத்தால், வடக்கு, தெற்கு எனப் பிரிக்கப்படும்.

ADVERTISEMENT

தனித்தனியாக உள்ள காவல் துணை ஆணையா்களின் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றப்பரிவு பதவிகள் ஒன்றிணைக்கப்படும். தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கு தனித்தனி காவல் துணை ஆணையா்கள் நியமிக்கப்பட்டு, குற்ற வழக்குகள் மற்றும் சட்ட ஒழுங்கு தொடா்பான வழக்குகளைச் சோ்த்து கவனிப்பா். இந்த முறை, சென்னையில் பின்பற்றப்பட்டு வருகிறது. மதுரை மாநகா் காவல் துறை பிரிக்கப்பட்டால், குற்றங்களை குறைப்பதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT