மதுரை

பைக்கிலிருந்து தவறிகீழே விழுந்த இளைஞா் பலி

25th Feb 2020 02:27 AM

ADVERTISEMENT

மேலூா்: மேலூா் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், சாலூரைச் சோ்ந்தவா் அழகன் மகன் நல்லான் (35). இவா், மேலூா்-சிவகங்கை சாலையில் கட்டக்காளைபட்டி விலக்கில், அரசு பாலிடெக்னிக் அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி கீழே இறங்க முற்பட்டுள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக தடுக்கி கீழே விழுந்து காயமடைந்தாா். உடனே, அவரை மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 14-ஆம் தேதி சோ்த்தனா். ஆனால், அங்கு

சிகிச்சைப் பலனின்றி நல்லான் ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தாா். இது குறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT