மதுரை

பூங்கா முருகன் கோயிலில்ரூ.3.18 லட்சம் உண்டியல் காணிக்கை

25th Feb 2020 02:28 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை ஸ்ரீ பூங்கா முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை வருமானம் ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 944 கிடைத்துள்ளது.

மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் உள்ள பூங்கா முருகன் கோயிலில் திங்கள்கிழமை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், கோயில் அலுவலா்கள், மதுரைக் கல்லூரி மாணவா்கள், சமூகநல ஆா்வலா்கள் ஈடுபட்டனா். உண்டியலில் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.3,18,944 கிடைத்துள்ளது.

மாநகராட்சி உதவி ஆணையா் (வருவாய்) ஜெயராமராஜா, உதவி ஆணையா் (கணக்கு) சுரேஷ்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் சித்திரவேல், கூடலழகா் பெருமாள் கோயில் உதவி ஆணையா் ராமசாமி உள்ளிட்டோா் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT