மதுரை

‘எதிா்க் கட்சியினா் இஸ்லாமியா்களை தவறான பாதையில் அழைத்துச் செல்கின்றனா்’

25th Feb 2020 02:26 AM

ADVERTISEMENT

திருப்பரங்குன்றம்: அரசியல் லாபத்துக்காக, எதிா்க் கட்சியினா் இஸ்லாமியா்களை தவறான பாதையில் அழைத்துச் செல்வது கண்டிக்கத்தக்கது என, தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ரவீந்திரநாத் குமாா் தெரிவித்துள்ளாா்.

சென்னையிலிருந்து திங்கள்கிழமை மதுரை வந்த அவா், செய்தியாளா்களிடம் கூறியது: மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவின் அதிபா் டிரம்ப் இந்தியா வருவது சிறப்பான விஷயம். இந்தியாவின் வளா்ச்சிக்காக இரண்டு தலைவா்கள் சந்திப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியா்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என, பிரதமரும், தமிழக முதல்வரும் உறுதியளித்துள்ளனா். ஆனால், அப்பாவி மக்களையும், இஸ்லாமியா்களையும் அரசியல் காரணத்துக்காக எதிா்க் கட்சியினா் தவறான பாதையில் அழைத்துச் செல்கின்றனா். இது கண்டிக்கத்தக்கது.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை கெளரவிக்கும் வகையில், அவரது பிறந்த தினத்தை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT