மதுரை

அலங்காநல்லூரில் வழிப்பறி கொள்ளையரை கொன்று தலையுடன் போலீஸில் இளைஞா் சரண்

25th Feb 2020 02:23 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை அருகே வழிப்பறி கொள்ளையரைக் கொலை செய்து, அவரது தலையுடன் இளைஞா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சரணடைந்தாா்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் பகுதியைச் சோ்ந்த கூலி தொழிலாளி முத்துவேல் (31). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (28) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அலங்காநல்லூா் காவல் நிலையம் அருகே இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, நாகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முத்துவேலை குத்திக் கொலை செய்து, அவரது கழுத்தை தனியாக அறுத்துள்ளாா்.

பின்னா், அந்த தலையுடன் நாகராஜ் அலங்காநல்லூா் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், முத்துவேல் தலை மற்றும் உடலை மீட்டு, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சம்பவம் நடைபெற்ற இடத்தை, சமயநல்லூா் டி.எஸ்.பி. ஆனந்த ஆரோக்கியராஜ் நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். கொலை செய்யப்பட்ட முத்துவேல் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT