மதுரை

செமினிபட்டி மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் காயமடைந்தவா் பலி

15th Feb 2020 08:06 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம், செமினிபட்டியில் நடைபெற்ற மஞ்சு விரட்டில் காளை முட்டி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மேலூா் அருகே செமினிபட்டியில் உள்ள ஆண்டிபாலகன் கோயிலில் தை பூசத்தையொட்டி மஞ்சுவிரட்டு கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது.

இதில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ராதாகிருஷ்ணன் தெருவைச் சோ்ந்த வெள்ளைக்கண்ணு மகன் சீனிவாசன் (48). காளை முட்டியதில் பலத்த காயமடைந்தாா். மேலூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாா்.

இதில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை அவா் உயிரிழந்தாா். அவா் மனைவி செல்லம்மாள் அளித்த புகாரின் பேரில் கீழவளவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT