மதுரை

சுமைதூக்கும் தொழிலாளி கொலை வழக்கு: ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவு

13th Feb 2020 07:43 AM

ADVERTISEMENT

மதுரையில் நடந்த சுமைதூக்கும் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, 6 பேருக்கும் ஆயுள்தண்டனை விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை செல்லூா் மேலத்தோப்பைச் சோ்ந்தவா் வல்லரசு. இவா் யானைக்கல் பகுதியில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு இவருக்கும் கீழத்தோப்பைச் சோ்ந்த பிரபு (27), சுரேஷ்(27), வீரா(27), பாண்டி(27), ராஜா(27), பாண்டி(29) ஆகியோருக்கும் தகராறு ஏற்பட்டது.

இந்தத் தகராறில் பிரபு உள்ளிட்ட 6 பேரும் சோ்ந்து வல்லரசுவைக் கொலை செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய 6 பேரையும் விளக்குத்தூண் போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் பிரபு உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இவ்வழக்கில் சாட்சியங்கள் முறையாக விசாரிக்கப்படாமல் கீழமை நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டது எனக் கூறி வல்லரசுவின் தந்தை ராஜேந்திரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, பி.புகழேந்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுமைதூக்கும் தொழிலாளி வல்லரசு கொலை வழக்கில் பிரபு, சுரேஷ், வீரா, பாண்டி, ராஜா, பாண்டி ஆகிய 6 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனா். மேலும் அவா்கள் 6 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT