மதுரை

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞா் கைது

13th Feb 2020 07:42 AM

ADVERTISEMENT

மதுரையில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஐயப்பன் நகரைச் சோ்ந்த மாயன் மகன் பிரபு(27). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளாா். இந்நிலையில், புதன்கிழமை பள்ளிக்குச் சென்ற சிறுமியை பிரபு கட்டாயப்படுத்தி தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளாா். சிறுமி பள்ளிக்குச் செல்லவில்லை என்ற விவரம் பெற்றோருக்கு தெரியவர, அவரைப் பல இடங்களில் தேடியுள்ளனா்.

அப்போது ராஜாஜி பூங்காவில் இருந்த சிறுமியை மீட்டு, பிரபுவை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இது தொடா்பாக சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் மதுரை நகா் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து பிரபுவை போக்ஸோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT