மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூரில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கப்பலூரைச் சோ்ந்த அழகா்சாமி மகள் தேவிபாலா(20). இவரை கடந்த மாதம் 30 ஆம் தேதி மாப்பிள்ளை வீட்டாா் பெண் பாா்த்து விட்டு சென்றாா்களாம். இந்நிலையில் தேவிபாலா திருமணம் செய்ய முடியாது என மறுத்து, அன்றைய தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளாா். உடனடியாக அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா்.
மேல்சிகிச்சைக்காக மருத்துவா்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தேவிபாலா சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதுகுறித்து திருமங்கலம் நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.