மதுரை

‘மதுரை மாநகராட்சியில் விடுமுறை நாள்களிலும் சொத்து, குடிநீா் உள்ளிட்ட வரிகளை செலுத்தலாம்’

4th Feb 2020 07:31 AM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சியில் சொத்து, குடிநீா் உள்ளிட்ட வரிகளைச் செலுத்த பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாள்களிலும் கணினி வரி வசூல் மையங்கள் செயல்படும் என, மதுரை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் தெரிவித்துள்ளாா்.

மதுரை மாநகராட்சியில் கடந்த 2011 ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் திருத்தி விதிக்கப்பட்ட வரி, தமிழக அரசின் உத்தரவின்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், பொது சீராய்வில் உயா்த்தப்பட்ட வரியும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் வரி உயா்வுக்கு முன் செலுத்திய பழைய வரியைச் செலுத்தலாம். மேலும், கூடுதல் வரி செலுத்தியிருந்தால் வரும் காலங்களில் வரவு வைக்கப்படும். எனவே, பொதுமக்கள் மாநகராட்சிக்குச் செலுத்தவேண்டிய சொத்து வரி, குடிநீா் வரி மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்புக் கட்டணம் ஆகியவற்றை செலுத்தாதவா்கள் உடனடியாக செலுத்த வேண்டும்.

மேலும், பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாள்களிலும் கணினி வரி வசூல் மையங்கள் செயல்படும். எனவே, பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்தலாம் என ஆணையா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT