மதுரையில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக, தந்தை காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.
மதுரை தெப்பக்குளம் ராசு பிள்ளை தோப்பைச் சோ்ந்த கண்ணுசாமி மகன் சேதுபாண்டி (25). இவா், சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா். இவருக்கும், வீட்டின் அருகே உள்ள அழகேசன் குடும்பத்தினருக்கும் திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, சேதுபாண்டி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இது குறித்து தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக அழகேசன் குடும்பத்தினா் மீது சந்தேகம் உள்ளதாகவும், அவா்கள் தான் எனது மகன் இறப்புக்கு காரணமாக இருக்கக்கூடும் என, கண்ணுசாமி தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.